நல்லைக்கந்தனுக்கு மஞ்சம் (10ம் திருவிழா)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா 06.08.2008 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.கொடியேற்றத்துடன் ஆரம்பித்த நல்லூர் திருவிழா எதிர்வரும் 31ஆம் நாள்வரை 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது அந்தவகையில் இன்று 15ஆம் திகதி மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழா நடைபெறவுள்ளது

புகைப்படம் : கானாபிரபா அண்ணாவின் வலைப்பூ

யாழ்ப்பாணம் நல்லுர் கந்தன் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (06.08.2008) 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது .கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் நல்லூர் திருவிழா எதிர்வரும் 31ஆம் நாள்வரை 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும் 23ஆம் திகதி மாலை 5 மணிக்கு கார்த்திகைத் திருவிழாவும் 25ஆம் திகதி காலை 7 மணிக்கு சந்தான கோபாலர் திருவிழா வும் இடம்பெறும்.
25ஆம் திகதி மாலை 5 மணிக்கு கைலாச வாகனமும் 26ஆம் திகதி காலை 7 மணிக்கு கஜவல்லி மகா வல்லி உற்சவமும் மாலை 5 மணிக்கு வேல் விமானமும் இடம்பெறும்.
27ஆம் திகதி காலை 7மணிக்குத் தண்டாயுதபாணி உற்சவமும் அன்று மாலை 5 மணிக்கு ஒருமுகத் திருவிழா வும் இடம்பெறும். 28ஆம் திகதி 23ஆம் திருவிழா. மாலை 5 மணிக்கு சப்பரம் இடம்பெறும்.
29ஆம் திகதி 24ஆம் திருவிழா. அன்று காலை 7 மணிக்குத் தேர்த்திரு விழா இடம்பெறும். ஆறுமுகப் பெரு மான் வள்ளி தேவசேனா சமேதராகத் தேரில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலிப்பார். 30ஆம் திகதி சனிக் கிழமை 25ஆம் திருவிழா. காலை 7 மணிக்குத் தீர்த்தம் இடம்பெறும்.
31ஆம் திகதி பூங்காவனமும் முத லாம் திகதி வைரவர் சாந்தியும் இடம் பெறும்.

83 கலவரம் 25ம் ஆண்டு நினைவுகள்

அன்பர்களே! 83 யூலை மாதம் மட்டும்தான் ஞாபகம் இருக்கின்றதா? 83ல் இருந்து ஒவ்வொரு நாளும் ஈழத்தில் நடந்த அக்கிரமங்கள் அட்டூழியங்கள் அநியாயங்கள் யாவும் மறந்து போகுமா என்ன?யூலை 83... என்று நினைத்துக் கலங்கிவிட்டுச் சும்மா இருக்கும் நேரமல்ல இது. உரிமையிழந்து பின்னர் உடமையிழந்து, இப்போது உயிர் கொடுத்துப் போராடுகின்ற எமது இனத்தின் உணர்வுகளுக்கு நம் தோள் கொடுக்க வேண்டிய நேரமிது. . நாளைப் பொழுது தமிழர் வாழ்வில் நல்லபடியாக மலரும் என்ற நம்பிக்கை வரவேண்டுமென்றால் அதற்கு நாமும் நமது கடமையைச் செய்திட வேண்டுமல்லவா

83 கலவரத்தில் சூறையாடப்பட்ட கோயில்கள் பட்டியல்

Viswanatha Sivan Temple in Trincomalee
Krishnan Temple in Trincomalee
Saneeswaran Temple in Trincomalee
Natesar Temple in Sivayogapuram, Trincomalee
Sri Tillaiambala Pillaiyar Temple in Anbuvalipuram,Trincomalee
Chithivinayakar Temple in Sinnatoduvai, Trincomalee
Vilankulam Pillaiyar Temple on Kandy Road, Trincomalee
Vyrutru Pillaiyar Temple on Kandy Road, Trincomalee
Pillaiyar Temple in China Bay, Trincomalee
Upparu Pillaiyar Temple in Trincomalee
Kitulootra Pallaiyar Temple in Kanniyai, Trincomalee
Kitulootra Murugan Temple in Trincomalee
Barathipuram Pillaiyar Temple in Pankulam, Trincomalee
Pillaiyar Temple in Pankulam, Trincomalee
Mudalikulam Pillaiyar Temple in Pankulam, Trincomalee
Ellai Kali Kovil in Pankulam, Trincomalee
Pillaiyar Temple in Panmadawachchi, Trincomalee
Papanasa Teertapillaiyar Temple in Trincomalee
Sri Pathini Amman Temple in Neelapalai, Kilivetti
Sri Kamakshi Ambal Temple in Jaffna
Saiva Maha Sabha in Kurunegala
Udupi Sri Muthuvinayakar Temple in Matale
Sri Muthumari Amman Temple in Matale
Muthuvinayakar Temple in Matale
Sri Chithivinayakar Temple in Matale
Sri Kadiresan Temple in Matale
Sri Poobalakrishnar Ashram in Matale
Sri Ganga Vinayakar Temple in Madulkelle
Kurinji Kumaran Temple, Peradeniya
Sri Muthumariamman Temple in Nawalapitya
Atmajothy Nilayam in Nawalapitiya
Athivinayakar Temple in Haldumulla, Haputale
Sri Sivasubramanya Temple in Bandarawela
Sri Kadiresan Temple in Badulla
Hindu Temple in Malangama, Badulla
Hindu Temple in Narangala, Badulla
Kali Temple in Rockhill, Badulla
Sri Poobalavinayakar Temple in Peliyagoda
Sri Balaselvavinayakar Temple in Maradana, Colombo
Sri Devi Karumari Amman Temple in Maligawatte, Colombo
Venkateswara Mahavishnu Moorthy Temple in Dehiwala, Colombo
Srimath Arunachaleswara Devasthanam in Colombo
Ramakrishna Mission, Colombo
Kandasamy Temple in Panadura
Sri Subramanya Temple in Matara
Hindu Pilgrims' Rest in Matara

20/07/2008 இன்று பிரித்தானியாவில் அனைத்துலக விளையாட்டு விழா

20/07/2008 இன்று பிரித்தானியாவின் Milton Keynes எனுமிடத்தில் அனைத்துலக விளையாட்டு விழா நடைறபெறுகிறது இங்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களுக்கும் குறைவிருக்காதென ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்
( படத்தின்மேல் சொடுக்கி பெரிதாகப்பார்க்கவும் )
படஉதவி பதிவு இணையத்தளம்

யாழ். குடாவில் செல்லிடப்பேசி பயன்படுத்த படையினரின் அனுமதி தேவை

யாழ்ப்பாண குடாநாட்டில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு சிறிலங்காப் படையினரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
யாழ்ப்பாணத்தில் சிடிஎம்ஏ தொலைபேசிகள் மற்றும் செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவதற்கு படையினரின் அனுமதிகள் பெறப்படல் வேண்டும். இந்நடைமுறை இம் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு மாதங்களாக சிடிஎம்ஏ தொலைபேசிகளுக்கான இணைப்புக்கள் யாழ். குடாநாட்டில் தடுக்கப்பட்டதுடன், செல்லிடப்பேசிகளுக்கான இணைப்புக்களும் சில மணிநேரங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இதற்கான அனுமதிப் பத்திரங்களை காவல்துறையினர் ஏற்கனவே யாழ். தொலைத் தொடர்பு அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். இந்த அனுமதிப் பத்திரங்கள் தொலைபேசி பாவனையாளர்களுக்கு அவர்களின் இம் மாதப் பற்றுச்சீட்டுக்களுடன் அனுப்பி வைக்கப்படும் என யாழ். பிராந்திய பொறியியலாளர் என்.சிவனந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதத்தில் இருந்து செல்லிடப்பேசி இணைப்புக்கள் படையினரால் அடிக்கடி துண்டிக்கப்பட்டதாகவும், யாழ். குடாநாட்டுக்கான தொலைபேசி இணைப்புக்களை படையினரே மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டில் 7,200 சிடிஎம்ஏ தொலைபேசிகளும், 150,000 செல்லிடப்பேசிகளும் பாவனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி : புதினம் இணையத்தளம்

கொழும்பில் காவல்துறையினர் அடாவடி: 600 வீடுகளை இடித்து தரைமட்டம்

கொழும்பில் காவல்துறையினர் அடாவடி: 600 வீடுகளை இடித்து தரைமட்டம்- ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதி கண்ணொளிக்காட்சி


யாழில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள்

அன்னை துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்று காலை தெல்லிப்பளை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன்
ஆலய தெற்க்கு வீதியில் அமைந்துள்ள யாத்திரிகர் விடுதியில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் செஞ்சொற்சேல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம் பெற்றது.அது தொடர்பான புகைப்படங்கள்



தகவல் மற்றும் புகைப்படங்கள் : பதிவு இணையத்தளம்

கியூபெக் மாநிலத்தில் இன்று பொங்கு தமிழ் நிகழ்வு

கனடாவின் கியூபெக் மாநிலத்தில் உள்ள மொன்றியல் நகரில் இன்று பொங்கு தமிழ் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
மொன்றியல் நகரில் உள்ள Howard Park மைதானத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு தொடங்கவுள்ள இப் பொங்கு தமிழ் நிகழ்வினை மொன்றியல் கியூபெக் தமிழ்ச் சமூகம் ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் சிறப்புரையாற்றவுள்ளதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இன்று நடைபெற ஏற்பாடாகியுள்ள நிகழ்வில் அதிகளவிலானோர் தமது இன மான உணர்வினை வெளிப்படுத்துவார்கள் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


நன்றி
புதினம் :: இணையம்

அடைக்கலம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் விடயத்தில் ஐரோப்பிய நீதிமன்றம் திருப்புமுனைத் தீர்ப்பு

பிரித்தானியாவால் அடைக்கலம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரை இலங்கைக்குத் திருப்பியனுப்ப வேண்டாம் என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் இன்று மிக முக்கிய தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில் பாரிய சித்திரவதைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற காரணத்தினாலேயே இந்தத் தீர்ப்பை அளிப்பதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கான தீர்ப்பை இன்று வெளியிட்டிருக்கும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் கொழும்புக்கு நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து, விசாரணைகளுக்குஉட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவோர் முன்னரும் கைது செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அது தொடர்பான பதிவுகள் சிறீலங்கா அரசாங்கத்தின் வசம் இருக்கக்கூடும் என்றும்,

அவ்வாறானோரின் உடலில் காயங்கள் எவையும் இருந்தால், அது அவர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் நிலைக்கு இடமளிக்கும் என்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

இவ்வாறான அபாயத்தை எதிர்நோக்கக்கூடிய விண்ணப்பதாரிகளை கொழும்புக்கு நாடுகடத்துவது, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சாசனத்தின் மூன்றாவது சரத்தை மீறும் செயலாக அமையும் என்றும்
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டோர் கொழும்பு நகரில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களை விட, கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள்
அதிகமாக இருப்பதாகவும், எனினும் எந்தவொரு அகதித் தஞ்ச விண்ணப்பமும் பொதுப்படையாக அல்லாது, தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த வகையில், கொழும்புக்கு நாடுகடத்தப்படும் அனைத்துத் தமிழர்களும், அபாயத்தை எதிர்நோக்ககூடும் எனக் கூற முடியாது என்றும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், துரோகிகளாகவும், எதிரிகளாகவும் இனம்காணப்படுவோர் தவிர்ந்த ஏனைய சாதாரண பொதுமக்களுக்கு, கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளால் எவ்வித ஆபத்தும் ஏற்படப் போவதில்லை என்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தத் தீர்ப்பினால் பிரித்தானியாவில் அடைக்கலம் மறுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் திருப்பியனுப்பப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவுள்ளன.

1999 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அடைக்கலம் கோரிய, 33 வயதான இலங்கைத் தமிழர் தொடர்பிலேயே இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இவர் தமது மனுவில் இலங்கையில் இருந்த போது பல தடவைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டுத் தாம் சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கிய ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், தமக்கு இலங்கைத் தமிழர்களிடம் இருந்து பல மனுக்கள் வந்திருப்பதால், சுமார் 342 பேர் தொடர்பில் பிரித்தானியா விதித்திருக்கும் நாடு கடத்தல் உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது

வணக்கம் பனங்கூடல் வலைப்பூ உங்களை வரவேற்கிறது

வணக்கம் வலையுலக நண்பர்களே பனங்கூடல் எனும் இவ்வலைப்பூவானது தாயக செய்திகள் , நிகழ்வுகள் , தாயகத்திற்காய் நடைபெறும் நிகழ்வுகள் , புலம்பெயர் தாயக உறவுகளின் செய்திகளினைத்தாங்கி வருகிறது .

நன்றிகளுடன்
யாழ்பாடி