நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (06.08.2008) 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது .கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் நல்லூர் திருவிழா எதிர்வரும் 31ஆம் நாள்வரை 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும் 23ஆம் திகதி மாலை 5 மணிக்கு கார்த்திகைத் திருவிழாவும் 25ஆம் திகதி காலை 7 மணிக்கு சந்தான கோபாலர் திருவிழா வும் இடம்பெறும்.
25ஆம் திகதி மாலை 5 மணிக்கு கைலாச வாகனமும் 26ஆம் திகதி காலை 7 மணிக்கு கஜவல்லி மகா வல்லி உற்சவமும் மாலை 5 மணிக்கு வேல் விமானமும் இடம்பெறும்.
27ஆம் திகதி காலை 7மணிக்குத் தண்டாயுதபாணி உற்சவமும் அன்று மாலை 5 மணிக்கு ஒருமுகத் திருவிழா வும் இடம்பெறும். 28ஆம் திகதி 23ஆம் திருவிழா. மாலை 5 மணிக்கு சப்பரம் இடம்பெறும்.
29ஆம் திகதி 24ஆம் திருவிழா. அன்று காலை 7 மணிக்குத் தேர்த்திரு விழா இடம்பெறும். ஆறுமுகப் பெரு மான் வள்ளி தேவசேனா சமேதராகத் தேரில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலிப்பார். 30ஆம் திகதி சனிக் கிழமை 25ஆம் திருவிழா. காலை 7 மணிக்குத் தீர்த்தம் இடம்பெறும்.
31ஆம் திகதி பூங்காவனமும் முத லாம் திகதி வைரவர் சாந்தியும் இடம் பெறும்.



0 பின்னூட்டம்(கள்):
Post a Comment